ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் தண்ணீர்!

Share

சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க, குறைக்கத் திண்டாடி வருகின்றனர். இயற்கையான முறையில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் எளிதில் கிடைக்கக் கூடிய உணவு வெண்டைக்காய்.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் தண்ணீர்!

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் பி6, ஃபோலேட் போன்ற பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன் சர்க்கரை நோயால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் செய்கின்றன. வெண்டைக்காயின் கரையக் கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு நிலையாக இருக்க உதவுகிறது.

100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிதான் உள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க, வயிறு நிறைய வெண்டைக்காய் எடுத்துக்கொள்ளலாம். வெண்டைக்காயை வேக வைத்து, கிரில் முறையில் நெருப்பில் வாட்டி சாப்பிடலாம். எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெண்டைக்காய் தண்ணீரை அருந்தி வருவது சர்க்கரை அளவு குறைய உதவும்.

இதற்கு 5-6 வெண்டைக்காயை எடுத்து தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். வெண்டைக்காயின் காம்பு மற்றும் அடிப் பகுதியை வெட்டி இரண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு சொம்பு தண்ணீரில் (மூன்று கிளாஸ் அளவு) இந்த வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் வெண்டைக்காயை வெளியே எடுத்துவிட்டு, தண்ணீரை அருந்த வேண்டும்.

தொடர்ந்து இந்த வெண்டைக்காய் தண்ணீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். மேலும், ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்கும் ஆற்றலும் வெண்டைக்காய்க்கு உள்ளது. சோர்வு நீங்கி, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

சர்க்கரை அளவை அதிகமாக குறைக்க வேண்டும் என்று அதிகமாக வெண்டைக்காய் தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டாம். அது ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் குறைத்துவிட வாய்ப்புள்ளது. இதனால் வேறு விதமான பாதிப்புகள் வரலாம். சர்க்கரை நோய்க்கு வீட்டு வைத்தியம் எடுக்கும்போது கூடுதல் கவனம் தேவை!

Leave A Reply