துளசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்

Share

துளசி இலை மிகவும் புனிதமானதாக நம்முடைய பாரம்பரியத்தில் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடி வளர்ப்பார்கள்.

காலையில் வழிபாடு செய்த பிறகு வெறும் வயிற்றில் சிறிதளவு துளசி இலையை கிள்ளி மென்று சாப்பிட்டு செல்வார்கள்.

அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் துளசி செடி வளர்க்க பலருக்கு இடம் இல்லை. பால்கனியில் வளர்த்தாலும் பெரிய அளவுக்கு அதை கவனிப்பதும் இல்லை.

துளசி மென்று சாப்பிட்டால் கிடைக்கும் ஆச்சரிய பலன்கள்!

துளசி மிகச்சிறந்த ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி-ஃபங்கல் திறன் கொண்டது.

இது புண்களை ஆற்றும் திறன் கொண்டதாகவும் உள்ளது. சாதாரண சளி, குமட்டல், காய்ச்சல், மாதவிலக்கு கால வலி போன்றவற்றை போக்கும் திறன் கொண்டது.

வெறும் வயிற்றில் சிறிதளவு துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றிப் பார்ப்போம்…

துளசி இலைகளை பறித்து முந்தைய நாள் இரவில் ஒரு சொம்பு தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த இலைகளை மென்று தின்று, அந்த தண்ணீரை அருந்தி வர வேண்டும்.

தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்கள், நோய்த் தொற்றுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதியாக்கும்.

துளசி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகப் பாய துணை செய்யும்.

துளசியை சாப்பிட்டு வருவது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. சிறிய கற்கள் என்றால் அதை கரைத்து வெளியேற்றவும் துணை செய்கிறது. அப்படி சிறிய கற்கள் வெளியேறும் போது ஏற்படும் தாங்க முடியாத வலியைக் குறைக்க உதவுகிறது.

தினமும் காலையில் துளசி ஜூஸ் அருந்தி வந்தால் சிறுநீரக கல் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு பெருமளவுக்கு குறையும்.

காய்ச்சல், சளி, இருமலைக் குறைக்கும் திறன் துளசிக்கு உண்டு. இதன் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதிர்ப்புத் திறன் காரணமாக காய்ச்சல், சளி கட்டுப்படும்.

சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சொரி, கருவளையம், சரும சுருக்கம் போன்றவற்றை போக்கும் திறன் துளசிக்கு உண்டு. இதற்கு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் மிக முக்கிய காரணம்.

இது ப்ரீராடிக்கல்ஸ் பாதிப்பில் இருந்து செல்களைக் காத்து வயோதிகத்தைத் தாமதப்படுத்துகிறது.

துளசியில் வைட்டமின் ஏ சற்று உள்ளது. இது பார்வைத் திறன் மேம்பட உதவுகிறது. தொடர்ந்து துளசி சாப்பிட்டு வந்தால் வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வைத் திறன் குறைவு, மாலைக்கண் நோய், கண் புரை போன்றவை தாமதப்படும்!

Leave A Reply