மருத மரப் பட்டையை பொடித்து, அதில் 1-2 கிராம் அளவை வெந்நீரில் கலந்து உட்கொண்டுவர வாத நோய்கள், மூட்டுவலி குணமாகும்.
இலையை அரைத்து பாலில் கலந்து காலை, மாலை இருவேளை 3 நாட்கள் குடித்தால் பித்தவெடிப்பு குணமாகும்.
மருதம் பழத்தை நீராவியில் அவித்து பிசைந்து புண்களின் மீது வைத்து கட்டிவர கொடிய புண்களும் ஆறிவிடும்.
மருதம்பட்டையை நன்கு பொடித்து, அதை துணியில் சலித்து மூக்குப்பொடி என்று பயன்படுத்த தலைவலி நீங்கும்.
மருதம் பட்டையை பொடித்து பல்துலக்கி வர பல் வலி, பல் ஈறு வீக்கம் ஆகியவை குணமாகும்.
மருதம் பட்டையை சிறு, சிறு துண்டுகளாக்கி, 4 பங்குநீரில் அதை கலந்து, ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டி குடித்துவர இரைப்பு, இருமல், கரம், கழிச்சல் ஆகியவை குணமாகும்.