காப்பீடு இல்லையென்றாலும் கொரோனா சிகிச்சை பெறலாம் – அமைச்சர் தகவல்!

Share

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்கள் கூட்டம் குவிந்தது. இத்தகைய இக்கட்டான சூழலை பயன்படுத்திக்கொண்ட தனியார் மருத்துவமனைகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த திட்டத்தின் கீழ், எந்தெந்த அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இல்லை என்றாலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 20 சதவீதமாக குறைந்துள்ளது.

காப்பீடு திட்ட அட்டை இல்லை என்றாலும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மருத்துவப் அட்டை பெற்று வழங்கினால் போதும் என்று கூறியுள்ளார்.

Leave A Reply