23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 3000 விதம் டெபாசிட் செய்துள்ளார் – சல்மான்கான்

Share

பாலிவுட்டில் சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானமின்றி பசியால் வாடுவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், அந்த 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் சுமார் 7 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்

ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்து அவர்களுடைய யூனியன் மூலம் வங்கி கணக்கை பெற்று ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூபாய் 3000 அவர்களுடைய வங்கி கணக்கில் தானே டெபாசிட் செய்துள்ளார். 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 3000 விதம் டெபாசிட் செய்ததால் 6 கோடியே 90 லட்சம் வரை இதுவரை அவர் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு ஒருவேளை நீடிக்கப்பட்டால் மேலும் ரூபாய் 3000 நிதி உதவி செய்வதாகவும் அவர் 23 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வாக்குறுதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் சல்மான்கான் செய்த இந்த உதவி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Leave A Reply