செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5000 கன அடி நீர் திறப்பு

Share

நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக முழுக்கொள்ளளவை எட்டும் நிலையை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

இதனிடையே, மழை காரணமாக இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 999 கனஅடியாகவும் உயர்ந்தது.

24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரி, 22 அடியை எட்டியவுடன் நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 12 மணியளவில் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் 1500 ஆக அதிகரித்தது.

தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுவந்தது.

இன்று மாலை 6 மணி முதல் 5000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply