அரியலூர் நகராட்சியில் ஒரு அரிய வெற்றி!

Share

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எத்தனையோ காட்சிகள் அரங்கேறின. ஆனால், அரியலூரில் ஒரு அரிய காட்சி அரங்கேறியுள்ளது.

அரியலூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. திமுக அணியில் திமுக 15 இடங்களிலும், மதிமுக 1, காங்கிரஸ் 1, விசிக 1 என கூட்டணிக் கட்சிகள் மூன்று இடங்களிலும் போட்டியிடுவது என்று முடிவாயிற்று.

மதிமுக இரண்டு வார்டுகள் கேட்டு முடியாது என்றவுடன், அந்தக் கட்சியின் நகரச்செயலாளர், திமுக நகரச் செயலாளரை எதிர்த்து போட்டியிட்டார்.

திமுகவில் போடிட்டியிட வாய்ப்புக்கேட்ட தொடக்ககால கட்சிக்காரர்கள் மூவருக்கு நகரச்செயலாளர் வாய்ப்பு மறுக்கிறார். அவருடன் மாவட்டச் செயலாளர் சமாதானம் பேசியும் அவர் மறுத்துவிடுகிறார். இதையடுத்து, அந்த மூவரும், நகரச்செயலாளர் சீட் கொடுத்த 1, 7 ஆவது வார்டுகளில் போட்டியிட்ட கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும் 18 ஆவது வார்டில் விசிக வேட்பாளரை எதிர்த்தும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் திமுக 7 அதிமுக 7 இடங்களில் வெற்றிபெற்றன. திமுக நகரச்செயலாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட மதிமுக நகரச்செயலாளர் வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர்களை எதிர்த்து நின்ற 1 ஆவது வார்டு திருமதி சேசுமேரி காட்வின் லிலன்ஸ், 7 ஆவது வார்டு கலியமூர்த்தி, 18 ஆவது வார்டு புகழேந்தி ஆகிய அதிருப்தி திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வெற்றிச் செய்தி வெளியானவுடன், இவர்கள் மூவரும் மாவட்டச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை சந்தித்து தங்களை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

திமுக நகரச் செயலாளரை எதிர்த்து வெற்றிபெற்ற மதிமுக நகரச் செயலாளரும் அமைச்சரை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

இதையடுத்து, திமுகவின் ஆதரவு எண்ணிக்கை 11 ஆகியது. நகராட்சியும் திமுக வசமாகியது.

18 ஆவது வார்டு உறுப்பினர் புகழேந்தி

7 ஆவது வார்டு உறுப்பினர் கலியமூர்த்தி

1 ஆவது வார்டு உறுப்பினர் திருமதி சேசுமேரி காட்வின் லிலன்ஸ்

Leave A Reply