நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து அறிக்கை

Share

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் நீட் தேர்வு என்ற பெயரில் நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது.

தமிழக முதல்வர் தலைமையிலான அரசு சமீபத்தில் நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது சமூக வலைதளத்தில் நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம் ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்களுக்கு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் , தகுதியைத் தீர்மானிக்க ஒரே  தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் தலைமையிலான அரசு சமீபத்தில் நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது.  அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் பவுண்டேசன் மாணவர்களின் பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் வரும் ஜூன் 23க்குள்  பதிவு செய்கிறது. எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply