‘தண்ணி வண்டி’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் தம்பி ராமையா பங்கேற்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சரவணன், நடிகர் தம்பி ராமையா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நான் 2015ல் படம் தயாரிக்க திட்டமிட்டேன். அப்போது நடிகர் தம்பி ராமையா தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க என்னை அணுகினார். சினிமா தயாரிப்புக்கான அனைத்து பொறுப்புகளையும் அவரே ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
அவரது மகனை வைத்து 2020ல் சினிமா எடுத்து முடித்தேன். ஆனால் ரிலீஸ் செய்வதற்கு அவர்கள் இருவருமே வரவில்லை. இதனால் 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுகின்றனர். இவ்வாறு அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.