அலங்காநல்லூர் பேரூராட்சியில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு!

Share

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கடைப்பிடிக்கும்படி தமிழக அரசு அறிவித்த நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சியில் தலைவர் ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி தலைமையில், செயல் அலுவலர் ஜீலான் பானு, துணைத்தலைவர் சாமிநாதன், ஆர்.கோவிந்தராஜ் உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்ட அவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட அவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்துத் தந்த, அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத, சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும் சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமாற உறுதி ஏற்க்கிறேன்! என்று தலைவர் ரேணுகா ஈஸ்வரி சொல்லச்சொல்ல அனைவரும் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Leave A Reply