தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்… – முதல்வர் ஸ்டாலின்

Share

திருவள்ளூர் நேயம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், கொரோனா சங்கிலியை உடைப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு பயனளிக்கிறது. கடந்த 2 நாட்களாக கொரோனா குறைந்துள்ளது. முழு ஊரடங்கின் பயன் அடுத்த மூன்று நாட்களில் தெரியவரும். மக்கள் அனைவரும் முழு ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், கொரோனா தடுப்பு பணியில் அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்றை தடுக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் சராசரியாக தினமும் 7,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தினசரி பரிசோதனை 1.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

தடுப்பூசி தான் நமக்கு காவல்காரனாக செயல்படுகிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென தான் கெஞ்சிக் கேட்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், பாதிப்பு குறைந்ததும் தடுப்பூசி போடுவதை இயல்பாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்படும். சட்டமன்ற குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப் படும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply