நாளிதழ் பாக்கி பணம் கேட்ட ஏஜண்டை தாக்கிய பாஜக நிர்வாகி!

Share

திண்டக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன் கோட்டையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். தினகரன் தினமலர் தினமணி பத்திரிகை ஏஜெண்டாக உள்ளார்.

இவர் விருவீட்டில் உள்ள பாஜக ஒன்றிய தலைவர் கண்ணன் என்பவரது கடைக்குச் சென்று பேப்பர் போட்டதற்கு பாக்கி பணம் கேட்டுள்ளார்.. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கண்ணன் கடையில் இருந்த ஸ்குரூடிரைவரை எடுத்து பன்னீர் செல்வத்தை குத்தி காயப்படுத்தினார்.

அதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் விருவீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் கட்ட சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விருவீடு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து பாஜக நிர்வாகி கண்ணனை தேடி வருகிறார்.

Leave A Reply