இந்திய ஏரிக்கு குறுக்கே பாலம் கட்டும் சீனா – பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார்?

Share

இந்திய பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியின் குறுக்கே சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு சீனா தனது படைகளை விரைவாக கொண்டு வந்து சேர்க்க முடியும்.

இந்தியா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோக் பகுதியிலும் இரு தரப்பிலும் தலா 50,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய எல்லையில் சீனா தனது ராணுவத்துக்கான குடியிருப்பு ஒன்றையும் கட்டியுள்ளதை செயற்கைகோள் படத்தைக்கொண்டு அமெரிக்கா உறுதி செய்தது. இதைப்பற்றி இந்திய பிரதமர் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். எல்லை பிரச்சனை குறித்து சீனாவை கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்திற்கு அருகே பாங்காங் திசோ ஏரியை கடக்கும் வகையில் சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகவலை செயற்கைகோள் புகைப்படத்தின் அடிப்படையில் புவிசார் புலனாய்வு நிபுணர் டேமியன் சைமன் என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘ஏரியின் குறுக்கே சீனா கட்டும் பாலப் பணிகள் முழுமை அடைந்து வருவதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்றன’ என கூறி உள்ளார்.

பாகிஸ்தான் என்றால் வீராவேசமாக பேசுவதும், சீனா இந்திய நிலப்பகுதியை விழுங்குவதுகுறித்தோ, அருணாச்சல பிரதேசத்தில் தனது இஷ்டத்துக்கு பெயர்களை மாற்றுவதையோ கண்டிக்க பிரதமர் மோடி அஞ்சுகிறாரா என்ற கேள்வி நீண்ட நாட்களாக உலவுகிறது.

Leave A Reply