இன்று முதல் 5 நாட்களுக்கு வணிகர்களுக்கு தடுப்பூசி

Share

தமிழக சுகாதாரத்துறையிடம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"இன்று முதல் 5 நாட்களுக்கு  வணிகர்களுக்கு தடுப்பூசி" ராதாகிருஷ்ணன் தகவல்!!

கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமாக முகாம்களின் வாசலில் காத்திருக்கும் நிலையில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இன்று சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு இதுவரை 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் சென்னையில் மற்றும் 26,37,620 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் , “இன்று முதல் 5 நாட்களுக்கு வணிகர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதன் மூலம் 5 ஆயிரம் வணிகர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 11 ஆம் தேதி தான் கொரோனா தடுப்பூசிகள் வரும்.

தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11 ஆம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.

Leave A Reply