ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் தோனி

Share

கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுள் வழங்கவேண்டும் என ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என தோனி ரசிகர்கள் காலையிலேயே அதகளப்படுத்த தொடங்கிவிட்டனர். ஜூலை 7 மகேந்திர சிங் தோனியோட பிறந்தநாள். காலையிலே ஹேப்பி பர்த் டே தோனி-ங்கிற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக தொடங்கிவிட்டது.

தோனி தனது 40-வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார். தோனி ஆர்மி ‘தல’யோட வெறித்தனமான பேட்டிங் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். எங்க அண்ணனுக்கு நான் தான் முதல்ல பர்த் டே விஷ் பண்ணுவேன்னு காலையிலேயே ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார் நம்ம சின்ன தல சுரேஷ் ரெய்னா.

சுரேஷ் ரெய்னா தனது பதிவில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. நீங்கள் எனக்கு ஒரு நண்பராகவும், சகோதரராகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களிடம் எப்போது எதுவேண்டுமானாலும் கேட்கலாம். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுள் வழங்கவேண்டும். நீங்கள் ஒரு சிறந்த வீரராகவும், தலைவராகவும் இருந்ததற்கு நன்றி. ஹேப்பி பர்த் டே தோனி” எனப் பதிவிட்டுள்ளார்.

பிசிசிஐ ட்விட்டர் பதிவில், லெஜண்ட் மற்றும் இன்ஸ்பிரேஷன் என பதிவிட்டு முன்னாள் கேப்டன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துன்னு பதிவிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பதிவில், “சூப்பர் பர்த் டே டூ நம்ம தல தோனி பதிவிட்டுருக்காங்க. சிஎஸ்கே வீரர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவும் பதிவிட்டுள்ளனர். சாம் கரன், ரெய்னா, ஜடேஜா,புஜாரா, ராபின் உத்தப்பா என எல்லோரும் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply