குறையும் கொரோனா பரவல் விகிதம்…

Share

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கையை கையாண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கொரோனா பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் கட்டுக்குள் வந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

அதாவது, பாதிப்பு அதிகமாக இருந்த டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பாதிப்பு பன்மடங்கு குறைந்திருக்கிறது.

குறையும் கொரோனா பரவல் விகிதம்... ஆறுதல் அளிக்கும் மத்திய அரசின் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.08 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவால் 4,157 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 2.95 லட்சம் பேர் குணமடைந்ததால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25.95 லட்சமாக குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.66% ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் தொடர்ந்து 2 நாட்களாக 10%க்கு கீழ் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 2.22 லட்சம், நேற்று 1.98 லட்சமாக இருந்த நிலையில், இன்று 2.08 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply