விஜய் மல்லையாவின் பிரான்ஸ் நாட்டு சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

Share

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக, பிரான்ஸ் நாட்டில் இருக்கும் 14 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனில் வசித்து வருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

இது தொடர்பான விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில், விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், மல்லையாவின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரான்சில் இருக்கும் 14.34 கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.

Leave A Reply