குத்தகைதாரர்கள் பாதுகாப்பு சங்கத்தில் விவசாயிகள் இணையும் விழா!

Share

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் தேவதானம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கத்தில் விவசாயிகள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது,

விழாவில் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இருதயராஜ் வரவேற்று அரசு திட்டங்களை எடுத்துக் கூறினார். செயலாளர் பாண்டியன் மீடியா பாஸ்கர் அன்பரசன் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர் ஏழை மக்களுக்கு அரசு வழங்கும் இலவச சட்ட உதவிகளை எடுத்துக்கூறினார். மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தில் இணைந்தனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயகுமார் முத்துராமலிங்கம் யோகம் குஞ்சப்பா அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

2020-21 ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்து இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்காக சங்கம் போராடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பழனிவேல் அப்போலோ ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply