சிற்பக்கலையில் சாதியை புகுத்த முயற்சி!

Share

கோவில் பணிகளில் சிற்பக்கலை முடித்த மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவை எதிர்த்தும், சிற்பக்கலை ஆச்சார்யார்களுக்கே சொந்தமானது என்றும் கல்லூரியில் படிப்பதால் மட்டும் சிற்ப நுணுக்கம் வந்துவிடாது என்றும் கூறி, ஆச்சார்யார்களுக்கே ஸ்தபதி பணிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஒருவகையில் கலையை ஒரு குலத்திற்கு மட்டுமே சொந்தமானதாக்கும் முயற்சி என்றம், சிற்பக்கலையை ஒரு சாதிக்கு மட்டும் உரிமை கொண்டாடும் போக்கு என்றும் சிற்பக்கலை பயின்றோர் குரல் எழுப்பியுள்ளனர்.

சிற்பக்கலை பயின்ற அனைவருக்கும் கோயில் பணிகள் வழங்க வேண்டும். முத்தையா ஸ்தபதியின் உறவினர் கரு.தட்சிணாமூர்த்தியின் சாதிவெறி போக்கை தடுத்து நிறுத்தும்படி சிற்பக்கலை மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிற்பக்கலைக் கல்லூரிக்கு ஆச்சாரியர்களையே முதல்வராக்க வேண்டும் என்றும், ஆச்சாரியார் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கே சிற்பக்கலை கல்லூரியில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் கரு.தட்சிணாமூர்த்தியின் ஆதரவுபெற்ற அமைப்பு கோரி வருகிறது.

Leave A Reply