மீண்டும் ஐபிஎல் – தேதியுடன் அறிவித்தது பிசிசிஐ!

Share

செப்டம்பர் 19ல் மீண்டும் ஐபிஎல் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் துவங்க உள்ளதாகவும் அக்டோபர் 15 ஆம் தேதி ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறும் என பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும்? அல்லது அவ்ளோவ் தானா? என குழப்பங்கள் எழுந்த நிலையில் சற்றுமுன் வெளியான பிசிசிஐயின் இந்த முக்கிய அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதுத்தெம்பை கொடுத்துள்ளது.

Leave A Reply