அமேசானின் சி.இ.ஓ. பொறுப்பிலிருந்து விலகுகிறார் – ஜெப் பிசோஸ்

Share

ஜூலை 5ம் தேதியன்று அமேசானின் தலைமை நிர்வாக பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெப் பிசோஸ் தெரிவித்தார்.

அமேசான் நிறுவனத்தை கடந்த 1994ம் ஆண்டு ஜூலை 5ம் தேதியன்று ஜெப் பிசோஸ் தொடங்கினார்.

அமேசான் நிறுவனத்தை சாதாரண புத்தககடையக தொடங்கி அதன்பின் படிப்படியாக வளர்த்து உலகின் முன்னணி ஆன்லை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக ஜெப் பிசோஸ் கொண்டு வந்துள்ளார்.

அமேசான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜெப் பிசோஸ் கடந்த பிப்ரவரி மாதமே தெரிவித்து இருந்தார். ஆனால் எப்போது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

சஸ்பென்ஸை உடைத்த ஜெப் பிசோஸ்… ஜூலை 5ம் தேதி அமேசானின் சி.இ.ஓ. பொறுப்பிலிருந்து விலகுகிறார்
அமேசான்

அமேசான் பங்குதாரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஜெப் பிசோஸ் பேசுகையில், எனக்கு மிகவும் உகந்த தேதியை, என்னுடன் நெருக்கமான தேதியை தேர்வு செய்துள்ளேன். அந்தத் தேதியில் நான் தலைமை நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.

அமேசான் தொடங்கப்பட்ட ஜூலை 5ம் தேதி நான் விலகுகிறேன். ஏறக்குறைய 27 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தை தொடங்கி நடத்தி இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

சஸ்பென்ஸை உடைத்த ஜெப் பிசோஸ்… ஜூலை 5ம் தேதி அமேசானின் சி.இ.ஓ. பொறுப்பிலிருந்து விலகுகிறார்
ஆன்டி ஜாஸே

57 வயதான ஜெப்பிசோஸின் சொத்து மதிப்பு 16,700 கோடி டாலராகும். இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.13லட்சம் கோடியாகும்.

ஜெப் பிசோஸுக்குப் பதிலாக, கடந்த 20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றிவரும் ஆன்டி ஜாஸே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 5ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

Leave A Reply