அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டி

Share

அமெரிக்க அதிபர் தேர்தல்வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ஷியாமலா கோபாலன் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியரான டொனால்ட் ஹாரிஸ் ஆகியோருக்குப் பிறந்த கமலா, அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டில், அவர் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக ஆனார். இந்த பதவியை வகித்த முதல் வெள்ளையரல்லாத பெண் கமலாதான்.

2016 இல், அவர் செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இப்போது ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், “ஜோ பிடெனால் அமெரிக்க மக்களை ஒன்றிணைக்க முடியும். ஏனென்றால் அவர் எங்களுக்காக போராடுகிறார். அதிபராக அவர் எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப வாழும் அமெரிக்காவை உருவாக்குவார்”என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு விவகாரத்திலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்து சர்ச்சையாகும். கமலா ஹாரிஸ் பற்றி ட்ரம்ப், “அசாதாரணமான மோசமானவர்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு பல தரப்புகளில் இருந்தும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒருவேளை கமலா ஹாரிஸ் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் துணை அதிபராக வெற்றிபெற்றுவிட்டால், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

Leave A Reply