தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்

Share

தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழ் பெருமக்கள் : வைரமுத்து ட்வீட்!!

டிஜிபி திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் 30ஆவது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்கிறார். கன்னியாகுமரி குழித்துறையை சேர்ந்த இவர் கடலூர் திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பி ஆகவும், அடையாறு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். முதல்முறையாக தமிழக டிஜிபியாக தமிழர் பொறுப்பேற்றுள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதேபோல் முன்னதாக இறையன்பு தமிழக தலைமை செயலாளராக பதவியேற்றார்.

தமிழ்நாடு அரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழ் பெருமக்கள் : வைரமுத்து ட்வீட்!!

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

“தமிழ்நாட்டரசின் தலைமைப்
பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்
நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும்

பதவி கண்டவர்கள்
பாராட்டுக்குரியவர்கள்
பதவி தந்தவர்கள்
நன்றிக்குரியவர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Leave A Reply