கேந்திரிய பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லை

Share

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

1 முதல் 6ஆம் வகுப்பு வரையில் அந்தந்த மாநில தாய்மொழிகளில் படிக்கலாம். ஆனால், 6ஆம் வகுப்புக்குப் பின் விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், அந்த விருப்பப் பாடங்களுள் ஒன்றாகத் தமிழ் இருந்தது. ஆனால் தற்போது அது நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக சமஸ்கிருதம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விமர்சித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மொழியில் கற்பிக்காத கேந்திரிய பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு என கேள்வியெழுப்பியிருந்தார்.

இச்சூழலில் புதிய கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ள தர்மேந்திர பிரதானிடம் திமுக எம்பி திருச்சி சிவா இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவா, “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாடங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக ஆன்லைனில் எல்லாப் பாடப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கின்றனர். அதில், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடம்தான் இருக்கின்றது.

DMK on Central Government MP Trichy Siva accused || வேளாண் மசோதாக்கள் மீது  மாநிலங்களவையில் விவாதம்: 'விவசாயிகளை காப்பாற்றுவதாக கூறி அடகு வைத்து  விட்டீர்கள் ...

தமிழ் மொழி இல்லை. 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால்தான் 7-ம் வகுப்புக்குச் செல்ல முடியும். சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர். ஆனால், தாய்நாட்டில் தாய்மொழியைப் படிக்க வாய்ப்பில்லை. இதற்காக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தேன்.

Dharmendra Pradhan: All You Need To Know About India's New Education  Minister

அவர் உடனே கல்வித்துறைச் செயலாளரை வரவழைத்து அதுகுறித்துப் பேசினார். அதன்பின் அவர் என்னிடம், பிரதமர் உட்பட என்னைப் போன்ற அமைச்சர்கள் யாரும் மாநில மொழிகளுக்கு எதிரிகளில்லை. அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்’ எனக் கூறினார். அதை நடைமுறையில் காட்டுமாறு நான் வலியுறுத்தினேன்” என்றார்.

Leave A Reply