கொரியா தமிழ்சங்க பொங்கல் விழாவுக்கு அமைச்சர் பொன்முடி வாழ்த்து!

Share

தென்கொரியா தலைநகர் சியோலில், கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 – 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஆகியோர் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருந்தனர்.

தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவான தமிழர் திருநாளான பொங்கலை சங்கம் முன்னெடுப்பது மகிழ்ச்சிக்குரியது என்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்திருந்தார்.

நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயரும் என்ற அவ்வை மூதாட்டியின் உரைக்கு ஏற்ப, பாரின் பசி தீர்க்க, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழவர் திருநாளான இந்நன்னாளில் தன் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதாக மாண்புமிகு இந்தியத்தூதர் ஸ்ரீப்ரியா ரெங்கநாதன் தெரிவித்திருந்தார்.

Leave A Reply