பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா

Share

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 424 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 506 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 21 ஆயிரத்து 672 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் 6.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply