மூர்த்தி பதவியேற்பில் மதுரை திமுகவினர் பங்கேற்பு!

Share

மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அவருடைய பதவியேற்புக்கு மதுரையிலிருந்து திமுகவினர் சென்றிருந்தனர்.

அரசியலில் அவருடன் இணைந்தே பயணிக்கும் நண்பர்கள் பதவியேற்பில் பங்கேற்றதுடன், அவர் கோட்டையில் தனது துறை அலுவலகத்தில் பொறுப்பேற்று கோப்புகளில் கையெழுத்திடும் நிகழ்விலும் உடன் இருந்தனர்.

மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்கும் நிகழ்வில் அவருடைய அறையில், மதுரை வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணிச் செயலாளர் ரேணுகா ஈஸ்வரி, அவருடைய கணவர் கோவிந்தராஜ் ஆகியோரும், மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் த.ரகுபதி, நடராஜன் உள்ளிட்டோர் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply