6 மாவட்டங்களில் கனமழை…

Share

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம். 

 கடந்த சில மாதங்களாக சென்னை மக்கள் வெப்பத்தில் காய்ந்த நிலையில் மழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அவ்வப்போது மழை பெய்தாலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டிருப்பது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என தகவல். 
 மேலும், தமிழ்நாட்டின் ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரியின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Leave A Reply