காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் கோரிக்கை நிறைவேறுகிறது!

Share

செங்கல்பட்டு அருகே உள்ள திருமணி ஊராட்சியில் அமைந்துள்ள H.L.L.பயோ டெக் தடுப்பூசி மையத்தை புனரமைக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷவர்தனை நேரில் சந்தித்து #HLL_Biotech_Limited தடுப்பூசி நிறுவனத்தில் மருத்துவ தயாரிப்புகளை தொடர வலியுறுத்தினார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் நேரில் சந்தித்து மேற்படி #HLL_Biotech_Limited தடுப்பூசி நிறுவனம் தொடர்ந்து செயல்பட நிதியினை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்திருந்தார்,

அதனைத் தொடர்ந்து கடந்த 2020 கொரோனா நோய் தொற்றின் போது தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க #HBL தடுப்பூசி நிறுவனத்தை பயன்படுத்த கோரிக்கை விடுத்திருந்தார். மாண்புமிகு தமிழக முதல்வரின் அமைச்சரவையில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியமிடமும் 17-05-2021 அன்று மேற்படி விவரங்களை கடிதங்களாக அளித்து ஆய்வு செய்ய வலியுறுத்தியிருந்தார்,

அதன்தொடர்ச்சியாகவே 25-05-2021 மாலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்படி நிறுவனத்தை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply