நொய்டாவில் 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு

Share

உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் ‘சூப்பர்டெக்’ என்ற கட்டுமானநிறுவனம் ‘எமரால்டு கோர்ட்’ என்ற 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 915 குடியிருப்புகள், 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது.

அசல் கட்டட வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது , பொது பயன்பாட்டிற்கான நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சூப்பர்டெக் நிறுவனம் மீது குடியிருப்போர் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரத்தை இடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சூப்பர்டெக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடந்தாண்டு ஆக. 31 ல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான அமர்வு , நொய்டா பெருநகர வளர்ச்சி ஆணையம் லஞ்சம் வாங்கி கொண்டு சட்ட விரோத மாக கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அசல் வரைபடத்தை வீடு வாங்க முன்பதிவு செய்தோருக்கு தர மறுத்துள்ளது தெரிய வருகிறது. எனவே விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இடிக்கப்பட வேண்டும். அத்துடன், குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு ரூ. 2 கோடி , சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் இழப்பீடு வழங்க வேண்டும். தவறினால் சூப்பர் டெக் நிறுவன நிர்வாகிகளுக்கு சிறை தண்டனை நிச்சயம் என தீர்ப்பளித்து.
இதையடுத்து கடந்த இழப்பீடு தொகையை இன்றைக்குள் (ஜன.17) வழங்கிட உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிட்டதாகவும் நாளைக்குள் (ஜன.18) அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் சூப்பர்டெக் நிறுவனம் தரப்பில் கூறியதைடுத்து. கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

Leave A Reply