ஐபிஎல் ரசிகர்களுக்கு இனிப்பு செய்தி

Share

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது.

மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது. வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அடுத்ததாக சந்தீப் வாரியார், சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, சிஇஓ காசி விஸ்வநாதனுக்கும் தொற்று கண்டறியப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

It was mentally tough in bio-bubble: Sourav Ganguly thanks players for  commitment to IPL success | Cricket News - Times of India

போட்டிகளைத் தற்காலிகமாகவே நிறுத்திவைத்ததே தவிர முழுவதுமாக ரத்து செய்யப்படும் என எங்கேயும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை. இதனால் எஞ்சிய போட்டிகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகமாவதால் இங்கே நடத்தப்படாது என திட்டவட்டமாக அறிவித்தார் தலைவர் கங்குலி.

IPL 2021 Suspended: BCCI To Look At A Possible Window Before The T20 World  Cup- Sourav Ganguly

எஞ்சியுள்ள 31 போட்டிகளை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் பயோ பபுள் முறையில் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மே 29ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply