இந்திய மக்களுக்கு பதிலளிக்க இந்திய அரசு கடமைப்பட்டிருக்கிறது..

Share

தடுப்பூசி பற்றாக்குறை குறித்த இந்திய மக்களுக்கு பதிலளிக்க இந்திய அரசு கடமைப்பட்டிருக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இருப்பினும் பல மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை.. இந்திய மக்களுக்கு பதிலளிக்க இந்திய அரசு கடமைப்பட்டிருக்கிறது.. பிரியங்கா காந்தி
கொரோனா தடுப்பூசி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், இந்திய மக்களுக்கு பதிலளிக்க இந்திய அரசு கடமைப்பட்டிருக்கிறது என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் பிரியங்கா காந்தி பேசியிருப்பதாவது: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா இன்று ஏன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது? 2020 கோடையில் மற்ற நாடுகள் தடுப்பூசிக்க ஆர்டர் வழங்க தொடங்கியபோது, இந்திய அரசாங்கம் தாமதமாக 2021 ஜனவரியில் தடுப்பூசிக்கு ஆர்டர் வழங்கியது ஏன்?

2021 ஜனவரி முதல் மார்ச் மாதங்கள் வரை நமது அரசு ஏன் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. அதேநேரத்தில் இதே காலத்தில் 3.5 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.

இந்திய மக்களுக்கு பதிலளிக்க இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. நாம் அவர்களிடம் கேள்விகளை கேட்க வேண்டும். அவர்கள் நமக்கு பதிலளிக்க வேண்டும்.

Leave A Reply