22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

Share

முழு கொள்ளளவு 24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக அதிகரித்துள்ளது.

மழை தொடர்ந்து பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது.

மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 230 கனஅடியில் இருந்து 1,096 கனஅடியாக அதிகரித்துள்ளது.

24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கத்தில் 22 அடியை தாண்டினால் தண்ணீர் திறக்கப்படும்.

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கனமழை தொடரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது.

நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் நேற்று ஒரே நாளில் 10 செ.மீ. மழை பதிவானது.

Leave A Reply