பொது போக்குவரத்துக்கு தளர்வுகள்? குறித்து நாளை முதல்வர் ஆலோசனை

Share

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மே24ம் தேதியில் இருந்து தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு 2 வாரங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால், 7ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 11 மாவட்டங்களில் மட்டும் முழு ஊடரங்கு நீடிக்கிறது.

பல்வேறு மாவட்டங்களில் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

நோய் பரவலின் நிலை மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரபடுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

நோய் பரவல் குறைவாக இருக்கும் சூழலில் பொது போக்குவரத்துக்கு தளர்வுகளை அறிவிக்கலாமா? பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இருக்கிறதா? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply