பயப்படுவதற்கன்றி
வேறுபலவற்றுக்காகவும்
நாம் பிறந்தோம்.
நேயங்கொள்வதற்கேயன்றி
வேறெதற்கும்
இல்லையில் வாழ்க்கை.
விருப்பப் படுவதற்கேயன்றி
வெறுத்துப் புறமோடி
வீணாகப் போக்க அல்ல.
மோட்சத்தை யோசிப்பதற்கன்றி
அதை சிருஷ்டிப்பதற்காகவும்
நாம் பிறந்தோம்.
அச்சத்தைக் கொஞ்சுவதன்றி
கச்சைகட்டி எழுந்து
கைகுலுக்கிக் கொள்வோம்.

µ~r
உணர்வுடன் நரகத்துழல்தலன்றி
உயிருடன் சொர்க்கத்தை
ஸ்பரிஸித்துக் கொள்வோம்.
முஷ்டியின் இறுக்கத்தில்
முதல்விழுங்கிகளின்
மூச்சினையடக்குவோம்.
முன்வினைப்பட்டதாரிகள்
மூச்சுவிட நாம்
காற்றுத் தருவோம்.
தோழனே, தோளினைக்குலுக்கி
தாழ்களை உடைத்தால்
முன்வினைப் பயன்மாறும் புரி!
-ATHANURCHOZHAN