குடிமக்கள் பற்றி அரசு அறிய தனி செயலி – முதல்வர் பார்வைக்கு ஒரு யோசனை!

Share

இன்றைய இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் எல்லாவிதமான தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு செயலி அரசின் சார்பாக உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழவேண்டும்.

தனித் தகவல்கள் அனைத்தும்…

ஓட்டுநர் உரிமம்…
வாகனங்களின் விவரங்கள்…
ரேசன் அட்டையின் முழு விவரங்கள்…
அரசால் விதிக்கப்படும் அபராதங்கள்…
கடவுச்சீட்டு விவரங்கள்…
விவசாயி என்பதற்கான முழு விவரங்கள்…

அரசின் எந்தெந்த சலுகைகள் யார் யாருக்குப் பொருந்தும் என்ற முழு விவரங்கள்…
ரேஷன் விநியோகம்…
கட்ட வேண்டிய வரி விவரங்கள்…
வருமான வரி தொடர்பான விவரங்கள்…
வழக்குகள் தொடர்பான விவரங்கள்…

இன்னும் சேர்க்க வேண்டிய அனைத்து விவரங்களையும் ஒரு செயலியின் வழியாக ஒழுங்குபடுத்த வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய முழு விவரத்தையும் சுயமாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கட்டமைக்க வேண்டும்.

:User name (Aadhaar number)
:Pass world
:OTP. முறையில் அந்தச் செயலி இயங்க வேண்டும்.

குடிமக்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் அரசிடம் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தச் சூழலில் இதற்கு ஒரே நேரத்தில் முழுமையான தீர்வு காண முடியும். அல்லாமல் அரசால் கடன்வாங்கி செய்யப்படும் மக்கள்நலத் திட்டங்களும் சலுகைகளும் பெரும்பகுதி கயவர்களின் கரங்களில் சேர்வதை தடுக்கவே முடியாது.

கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும். திராணியும் தெம்பும் முதுகெலும்பும் உள்ள ஆட்சியாளர்கள் முன்னுதாரணமாய்த் திகழட்டும்.

-ARULRAJ

Leave A Reply