அமைச்சர் பி.மூர்த்தியின் பெயரால் திமுக நிர்வாகியின் ‘அட்ராசிட்டிகள்’!

Share

சொந்தக் கட்சிக்காரர்களையே அச்சுறுத்தி வாரிக் குவிக்கிறார் மாவட்ட திமுக அவைத்தலைவரான எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன் என்கிறார்கள். இவருடைய நடவடிக்கை மதுரை புறநகர் மாவட்ட திமுகவுக்குள் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பலகட்சிகளில் இருந்துவிட்டு இப்போது திமுகவுக்கு வந்த இவரின் அட்டூழியம் அமைச்சர் பி.மூர்த்திக்கு தெரியுமா என்று இவர்கள் நொந்துபோய் கேட்கிறார்கள்.

ஏனென்றால், நான் சொல்வதைத்தான் அமைச்சர் கேட்பார் என்று எம்ஆர்எம் பாலசுப்ரமணியன் மார்தட்டுகிறாராம். காமராஜ் ஐஏஎஸ் அதிகாரியை ஒருநாள் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிறகு, அவரையே நம்ப வைத்துவிட்டாராம். அந்த அதிகாரியை கையில் போட்டுக்கொண்டு அடாத செயல்களில் ஈடுபடுகிறார் என்கிறார்கள்.

அடுத்த கட்சியிலிருந்து வந்த ஒருத்தர், திமுகவுக்காக ராத்திரி பகல் பாராமல் உழைத்து பணத்தை வாரியிறைத்தவர்களை மிரட்டும் போக்கு மதுரை புறநகர் மாவட்ட திமுகவில் பரவலான எரிச்சலை உருவாக்கி இருக்கிறது.

எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன்தான் எனது வலது கை என்றும், அவர் சொல்வதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சரே நேரடியாக சொல்லிவிடலாமே என்று திமுக வினர் சொல்கிறார்கள்.

Leave A Reply