ஐ.பெரியசாமி வெற்றி அதிசயமல்ல…

Share

ஒரு சினிமாவில் பாக்சிங் வளையத்துக்குள் வந்துவிழுவார் வடிவேலு. அவரை முரட்டு பாக்ஸர் ஒருவர் அடிஅடியென அடித்து வெளுப்பார். எல்லா அடிகளையும் தாங்கிக் கொண்ட வடிவேலு,

“ஏண்டா ஏன். நான் எந்த கண்டிசன்ல இங்கே வந்து விழுந்தேன் தெரியுமா? ஒரு புள்ளப் பூச்சிய அடிச்சிட்டு வீரனாட்டம் பீத்தாதே” என்பார்.

அதே நிலைதான் ஐ.பெரியசாமி விஷயத்திலும் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை திமுக இழந்திருக்கிறது. ஆனால், ஆத்தூரில் பணமே செலவழிக்க முடியாத பாமகவைச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளரை ஜெயித்ததை பெருசாக பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்…

திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பி.யும் அவருடைய மகன் செந்திலும் எந்த அளவுக்கு கட்சிக்காரர்களை அடக்கி வைத்திருக்கிறார்கள் என்றால், தங்களை மீறி யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்றே வைத்திருக்கிறார்கள்.

அதிமுகவில் சீனிவாசன் ஜெயித்தாலும், நத்தம் விஸ்வநாதன் ஜெயித்தாலும் ஐ.பெரியசாமிக்கு எந்த ஆபத்துமில்லை. அவர்களுடைய அண்டர்கிரவுண்ட் கூட்டு எல்லோருக்குமே தெரிந்துதான் இருக்கிறது.

இந்த விஷயங்களை யாரும் வெளியே சொல்லவே பயப்படுகிறார்கள். இவரும் இன்னொரு துரைமுருகன்தான். கலைஞருடன் தனக்குள்ள நெருக்கத்தைச் சொல்லியே இருக்கிற கட்சிக் காரர்களை அடக்கி வைத்திருக்கிறார்.

தனது தொகுதியிலும் தன்னுடைய மகன் தொகுதியிலும் பணத்தை இரைக்க முடிந்த ஐ.பெரியசாமி, திண்டுக்கல் தொகுதியில் சீனிவாசனிடம் மார்க்சிஸ்ட் கட்சியை பலி கொடுத்துவிட்டார். நத்தத்தில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விஸ்வநாதனிடம் விற்றுவிட்டார் என்கிறார்கள்.

நிலக்கோட்டையில் எளிதில் ஜெயித்திருக்க வேண்டிய முருகவேல் ராஜனையும் கவனிக்காமல் விட்டுவிட்டார்.
எல்லாவற்றுக்குமே மறைமுக அரசியல் டீலிங்தான் காரணம் என்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும் திமுகவுக்கு ஆகாது. துரைமுருகன் மாதிரி ஆட்களும் திமுகவுக்கு ஆகாது.

ஐ.பெரியசாமி 2006 பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்டு 26 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்திலும்,

2011 தேர்தலில் தேமுதிக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட போது 53 ஆயிரத்து 932 வாக்குகள்வித்தியாசத்திலும்,
2016 தேர்தலில் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து போட்டியிட்ட போது, 27 ஆயிரத்து 147 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்போது பணம் செலவழிக்க முடியாத சாதாரண புள்ளப்பூச்சியை ஜெயித்திருக்கிறார். இதை ஆகா ஓஹோவென்று புகழ்ந்து அவருடைய மாவட்டத்தில் 3 தொகுதிகளை இழந்ததை மறைக்கப் பார்க்கிறார்கள்.

ஆகவே, திமுக தலைவர் புதியதோர் அத்தியாயத்தை எழுதியே ஆக வேண்டும் என்று திமுகவின் உண்மையான தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave A Reply