பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Share

பீகார் 243 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி, நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி என நேரடியாக களம் கண்டனர். இதில் தேஜஸ்வி யாதவ் கூட்டணி வெற்றிபெறும் என கருத்து கணிப்பு சொல்கிறது.

இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. 38 மாவட்டங்களில் 55 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதலில் தபால் வாக்குகளும் , இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

கொரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு மையத்தில் வேட்பாளரும், அவரது முகவர்களாக 2 பேரும் அனுமதிக்கப்படுவர்.

குறிப்பாக பிற்பகலிலேயே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிந்து விடும் சூழலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதால், வாக்குப்பதிவு எண்ணிக்கை இரவு வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply