நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜக தீர்மானம்

Share

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜகவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாஜகவின் தீர்மானம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு" : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர்.

இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும். தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுடைய கருத்து உரிமைக்கும் எதிராக செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராக பாய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல். விமர்சனக் குரல்கள் ஒன்றிரண்டு தானே என அடக்க முயற்சித்தால், ஆயிரம் ஆயிரமாக மக்கள் ஆர்ப்பரித்து எழுவார்கள், அடக்குமுறைக் கும்பல்கள் அந்த வீச்சில் காணாமல் போய்விடுவீர்கள் எச்சரிக்கை” என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply