திராவிட இயக்க வரலாறை ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? – Paneerselvan

Share

நாம் நம் வரலாற்றைத் தொடர்ச்சியாக ஏன் பேசவேண்டும் என்றால், திரிபுகள் எப்பக்கம் இருந்தும் வரலாம் என்பதாலேதான்.

* தோழர் ஜீவானந்தம்-வாழ்வும் வரலாறும் – தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்!

* இன்றைக்கு பெரியாரை குற்றம் சொல்லுவதற்காக ஜீவானந்தத்தை உயர்த்தி பிடித்து கொண்டாடுவது,என்ற உத்தி தமிழ்நாட்டில் சிலரால் வேண்டுமென்றே முன்னிலைப் படுத்தப்படுகிறது.

* அவருடைய ஏழ்மையான வாழ்வை குற்றம் சொல்லுவதோ அவருடைய தியாகத்தை மறுப்பதோ நம்முடைய நோக்கம் அல்ல.

* அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மம் பட்டி என்ற கிராமத்திற்கு 1927-களில் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பெரியார் அங்கே ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருந்த சொரிமுத்து என்பரும் கூட்டத்தில் பேசினார்.

* அன்றைக்கு இயக்கத்திற்கு தந்தை பெரியாரால் அழைத்து வரப்பட்ட சொரிமுத்து தான் -ஜீவானந்தம் என்று சுயமரியாதை இயக்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

* ஜீவானந்தம் அந்தக்காலக் கட்டங்களில் பணக்காரனை விட’பார்ப்பனீயமே ஆபத்தானது என்று பிரச்சாரம் செய்தார்.

* 1934-இல் பகவத்சிங்கின்’நான் ஏன் நாத்திகன் ஆனேன்’?என்ற புத்தகம் ஜீவாவின் மொழி பெயர்ப்பில் பெரியாரால் வெளியிடப்பட்டது.

* 1935-இல் இந்த புத்தகத்திற்காக தந்தை பெரியாரின் அண்ணன் இ.வி.கிருஷ்ணசாமி அவர்களும் ஜீவானந்தமும் கைது செய்யப்பட்டார்கள்.

* அரசாங்கத்தின் பார்வை’ இயக்கத்தின் கம்யூனிச பிரச்சாரத்தால் அதிகாரிகள் சில ஆவணங்களைக் தந்தை பெரியாரிடம் காட்டி

* இயக்கம் தடைசெய்யப்படலாம் என்ற நிலையில்-தந்தை பெரியார் இருவரையும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

* இருவரும் சிறையில் இருந்து வெளிவந்தனர்.

* தந்தை பெரியார் அவர்கள் மன்னிப்பு கடித விவகாரத்திற்கு நானே முழு ஜவாப்தாரி என்றும்,ஒரு தலைவருக்குரிய முழு பொறுப்புணர்ச்சியோடு அறிக்கை வெளியிட்டார்.

* அதன் பிறகும் ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் தான் இருந்தார்.

* 1936-திருத்துறை பூண்டியில் நடந்த சுயமரியாதை இயக்க மாவட்ட மாநாட்டில் ஜீவானந்தமும் புதுக்கோட்டை வல்லத்தரசும்
பாழாய் போன தேர்தல் காரணமாக சுயமரியாதை வீரர்கள் மலை உச்சியிலிருந்து கீழே தரைக்கு வந்து விட்டார்கள் என்றனர்.

* பிராமணியத்தை வேரறுத்துத் தூளாக்கிக் பறக்க விட வேண்டுமென்பவர்களில் நானும் ஒருவன் என்று முழக்கமிட்டார்.(அந்த முழக்கம் தான் காற்றோடு பறந்தது). இயக்கத்தையும்,பெரியாரையும் பயங்காளி-கோழை-சர்வாதிகாரி என்றெல்லாம் பேசினார்கள்.

* பட்டுக் கோட்டை அழகிரி ஜீவானந்தத்திற்கு பதில் உரைத்துப் பேசினார்.

* அன்றைக்கு தலைவர் பெரியார் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது.(அதை தனிப்பதிவாக போடலாம்)

* ஜீவானந்தம் தனிக்கடை விரித்து ,கொள்வாரில்லை என்றவுடன் அவரால் பூர்ஷுவா கட்சி என்று வர்ணிக்கப் பட்ட காங்கிரஸில் அய்க்கியமானார்.

* வழக்கம் போல் தந்தை பெரியாரின். ‘குடி அரசு’ரஷ்ய நூல்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தது.

* சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மே’நாள் கொண்டாடப்பட்டது.

* அதன் பிறகு நெடுநாட்கள் வரை பொது உடமைத் தோழர்களே குடி அரசு அலுவலகத்திற்கு எழுதித்தான் கம்யூனிஸ்ட் நூல்களை அன்றைய காலகட்டத்தில் வாங்க வேண்டியிருந்தது.

* இதில் பெரியார் தொண்டனாக எனக்கு எழுகின்ற கேள்வியெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஜீவாவின் இந்த வரலாற்றில்
அவருடைய உண்மையான சுயமரியாதை இயக்க காலத்தை கூறாமல்

* ஒத்துழையாமை இயக்கத்தில் 1932-இல் பங்கு கொண்டு காந்தியவாதியாக சிறைசென்று கம்யூனிஸ்டாக திரும்பி வந்தார் என்று பொய்யான வரலாற்றை பொன்னீலன் போன்ற எழுத்தாளர்கள் எழுதியது என்ன நோக்கத்தில்?

* சிறையில் கூடு விட்டு கூடு பாயும் வித்தையும் சொல்லிக் கொடுக்கிறார்களா என்ன?

* சிறையில் இருந்த ஜீவாவிடம் மன்னிப்பு கடிதம் பெரியார் கட்டாயப்படுத்தி வாங்கினார்என்று எழுதுவது நகைப்புக்குரிய விஷயமாக தோன்றவில்லையா?

* அதன் பிறகும் ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில்தான் இருந்தார்.அதை வசதியாக மறைக்கும் காரணம் என்ன?

* பெரியாரிடம் இருந்து பிரிந்து சென்ற ஜீவா-ரஷ்யாவைப் போல் இங்கே புரட்சியை கொண்டு வந்து விட்டாரா என்ன?

* காங்கிரஸில் 1937-தேர்தலில் காங்கிரஸின் பரம ஏழைகளுக்கும்,பார்ப்பன சனாதனிகளுக்கும் ஓட்டுக் கொண்டார் ஜீவானந்தம்.

* இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தார்.கம்பனிடம் கம்யூனிச பாடம் கேட்டதால் வந்த விளைவோ என்னவோ?

* பெரியார் பார்ப்பன சனாதனிகளுக்கு எதிராக நீதிக் கட்சிக்கு ஆதரவு கேட்டார்.

* ஜீவானந்தமும் பொது உடமைக்கட்சிகாரர்களும் தங்களை ‘அக்மார்க்’சுதந்திர போரட்ட தியாகிகள் என்ற முத்திரையை காந்தியிடமும் ,காங்கிரஸிடமும் எதிர் பார்த்தார்களே ஒழிய

* அவரை மனிதனாக்கிய பெரியாரையும் சுயமரியாதை இயக்கத்தையும் வசைபாட அல்லவா செய்தார்கள்?

* இவ்வளவுக்குப் பிறகும் காங்கிரஸில் இவர்களுக்குத் துரோகி பட்டம் கிடைத்தது தான் மிச்சம்.சுதந்திரத்திற்கு பிறகு 1948-இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தடை செய்ததும் காங்கிரஸே!

* எட்டி உதைத்த காலுக்கு முத்தம் கொடுக்க முந்திக் கொண்டு நின்றார்களே ஒழிய,

* அவர்களுடைய தலைமறைவு வாழ்க்கையில் அவருக்கு முழு உதவியாய் இருந்த பெரியாரையும்,திராவிடர் இயக்கத்தையும் போற்ற வேண்டாம்!வரலாறு எழுதுகையில் தூற்றாமல் இருக்க வேண்டாமா?

* பழையவற்றையெல்லாம் மறந்து,தன்னுடைய பழைய தொண்டன் ஜீவாவுக்காக சென்னை தெருக்களில் சைக்கிள் ரிக்‌ஷாவில் வாக்கு சேகரித்தாரே பெரியார்,

* ஜீவாவின் மறைவுக்குப் பின்னர்-ஜீவாவின் மகளுக்கு மணமகன் பார்த்து திருச்சி பெரியார் மாளிகையில் மணமுடித்து வைத்தாரே பெரியார்-அந்த விழாவில் சர்பிரைசாக கலந்து கொண்ட முதல்வர் அண்ணா

* நானும் மணமக்களுக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்.அதுதான் சுயமரியாதைச் திருமணச்சட்டம் என்றாரே! மறக்கக் கூடிய தருணங்களா அவை.

* ஓஹோ!மறந்தே விட்டேன்! நன்றி என்பது அவர்களுடைய பாஷையில் பூர்ஷுவா’மென்டாலிட்டி.

* ஜீவாவை கொண்டாடுங்கள்.அதற்காக பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தூக்கு கயிற்றில் ஏற்றுவது எந்த வகையில் நியாயம்?

* தூக்கு மரத்தின் நிழலில் இருந்த கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர்,ஜீவாவிற்கு நெருக்கமாய் இருந்த காங்கிரஸ் முதல்வரால் தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக ஒரு பேச்சு உண்டே!அது அரசியல் தூய்மையில் எந்த வகை?

* தலைவர் பெரியார்-தன் தொண்டன் கொள்கை கோமகன் நடிகவேள் இராதாவிற்காக நீதிமன்ற நடவடிக்கைகள்,வக்கீல்களுடன் ஆலோசித்தல் -இதைத்தவிர பெரியார் அரசிடம் எதுவும் கேட்டதில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

Leave A Reply