ஹிஜாபும் பூணூலும் தேவையா? – உதயமுகம் பிப்.11 இதழ் கவர் ஸ்டோரி

Share

சங்கிகள் தலைக்குள் மாட்டுமூளைதான் இருக்கிறது என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் சங்கிகளை நொங்கி எடுப்பதில் தமிழ்நாடும் கேரளாவும் மட்டுமே முன்னணியில் இருந்தன. அதிலும் தமிழ்நாடு ரொம்பவே வேகமாக இருந்தது. கோபேக் மோடி என்று ட்ரெண்டாக்கி, வானில் பறந்தாலும், சாலைவழியே பயணிக்காமல் போனாலும் விரட்டி விரட்டி வெளுத்த மண் தமிழ்நாடு.

இங்கேதான் சங்கிகள் எதை தவறு என்கிறார் களோ அதையே வீம்புக்கு செய்யும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் ஒரு சினிமாவை எதிர்த்தால் அதை வெற்றிபெறச் செய்தார்கள். அவர்கள் எதைச் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதைச் செய்து அவர்களை கடுப்பேற்றும் பூமியாக தமிழ்நாடு இருக்கிறது.

அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் மாநிலங் களில் எல்லாம் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். பிரதமரே தேர்தல் பிரச்சாரத்துக்கு போக முடியாத அளவுக்கு முடங்கிக் கிடக்கிறார்.

அவர்கள் கையில் இருந்த ஒரே பிரச்சார ஆயுதம், ராமருக்கு கோவில் கட்டுவதுதான். அதையும் உச்சநீதிமன்றத்தை ஸ்வாகா செய்து ஒரு தீர்ப்பை வாசிக்கச் செய்து நிறைவேற்றி விட்டார்கள். ஆனால், அந்தக் கோவிலின் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் யாருக்காக என்பது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிட முடியாமல் முதலமைச்சர் யோகியே ஓட்டமெடுத்திருக்கிறார்.

பஞ்சாப்புக்குள் நுழையமுடியாத மோடி, ஆன்லைனில் பிரச்சாரம் செய்கிறார். அதையும் எதிர்த்து கோபேக் மோடி என்று ட்ரெண்ட் செய்கி றார்கள். உத்தரகாண்டில் பிரச்சாரத்தை ரத்து செய்யும் அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. கோவாவும் ‘வராதே கோ’ என்கிறது.

இந்த நிலையில்தான், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் கர்நாடக மாநிலத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைக்க ஒரு தந்திரத்தை கையில் எடுத்தது. அது என்ன பெரிய ராஜ தந்திரத்தையா கையில் எடுக்கப்போகிறது. அதுக்கு தெரிந்தது மதவெறியை தூண்டுவதுதானே. அதனால், ஹிஜாப் பிரச்சனையை கையில் எடுத்தது பாஜக. அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து கூலிக்கு ஆள் பிடித்து மாணவர்களைப் போல கல்லூரிகளுக்குள் நுழைந்து கலகம் விளைவித்தது.

கல்லூரி நிர்வாகமோ, இஸ்லாமிய மாணவி களை ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடைவிதித்தது. இது கர்நாடகம் முழுவதும் பரவும், இஸ்லாமிய மாணவிகள் படிப்புக்காக ஹிஜாப் அணிவதை கைவிடுவார்கள் என்று பாஜக நினைத்தது. அரசும் இதை வளரவிட்டது.

இந்நிலையில்தான் ஒரு மாணவி இந்த மதவெறிக் கும்பலுக்கு நடுவே துணிச்சலாக தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்குள் நுழைந்தார். முஸ்கான் என்ற மாணவியின் துணிச்சலைப் பார்த்து திகைத்த அந்த காவிக்கூலிகள், சுதாரித் துக்கொண்டு அந்த மாணவியை நோக்கி முன்னேறி ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் இட்டனர். அந்த மாணவி அவர்களை பார்த்து பயப்படுவார் என்று நினைத்தார்கள். அவரோ, அந்த கூலிப்படையை நோக்கி முன்னேறியபடி அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டார். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

அந்த மாணவியின் எதிர்ப்பைத் தொடர்ந்து கர்நாடகா பாஜக அரசு எச்சரிக்கை அடைந்தது. உடனே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டது.

முஸ்கான் என்ற அந்த மாணவியை மதங்களுக்கு அப்பால் இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுடைய அனைவரும் கொண்டாடினர். ஹிஜாப் என்பது மத அடையாளம் என்பதைத்தாண்டி, ஒரு உரிமைக்குரலின் அடையாளமாக மாறியது.

மதங்களுக்கு அப்பால், அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்தை மதசார்பற்ற இந்தியாவை விரும்பும் அனைவரும் முழங்கினார்கள். எந்த ஆயுதத்தை கலகத்திற்காக பாஜக கையில் எடுத்ததோ, அதையே, மத ஒற்றுமைக்கு ஆதரவான எதிர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.

இது ஆர்எஸ்எஸ் அமைப்பையை ஆட்டுவித்தது. ஐந்து மாநில தேர்தலில் இது பாஜகவுக்கு எதிராக திரும்பும் என்று பயந்த அந்த அமைப்பு, இஸ்லாமிய நல பிரிவு சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அப்படி ஒரு அமைப்பை தனது மதவெறி மூஞ்சியை மறைக்க ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வைத்திருக்கிறது. தனக்கான இஸ்லாமிய சங்கியை உருவாக்கவும், தனக்கான தலித் சங்கிகளை உருவாக்கவும் இத்தகைய பிரிவுகளை ஆர்எஸ்எஸ் வைத்திருக்கிறது. அந்த அமைப்பு, ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கவில்லை என்று அறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இஸ்லாமிய பெண்களாக இருக்கட்டும் இந்திய சமூகத்தில் எந்த பிரிவைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் உடை என்பது அவர்களுடைய தேர்வாக இருக்க வேண்டும் என்பதுதான் பகுத்தறிவாளர்களின் நிலைப்பாடு. உடையோ, உணவோ, கல்வியோ அவரவர் தேர்வு என்பதுதான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.

இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் மத அடையாளம் என்றால், பூணூல் எந்த அடையாளம்? ஒரு மாநில முதல்வரே இந்துச் சாமியார்களின் காவி உடையை அணிந்திருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் அகோரி சாமியாரை சட்டப்பேரவையில் அமரவைத்து ஆராதனை செய்த நிகழ்வுகள் உண்டு.

இந்து மாணவர்கள் தங்கள் மதச்சின்னங்களான நாமம், குங்குமம், விபூதி அணிந்து வருகிறார்கள் என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. உரிமைக்குரல் எழுப்பிவிட்டு வகுப்புக் குள் படிக்க சென்றார் முஸ்கான். ஆனால் வெறிக்கூச்சலிட்ட கூலிகளோ, கல்லூரியை விட்டு வெளியே ஒதுக்குப்புறத்தில் தங்கள் காவி வேஷத்தைக் கலைத்ததை நாடே பார்த்து காறித்துப்பியது.

இந்த நிலையில்தான், ஆஸ்கார் விருதுபெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இரண்டு மகள்களுடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஒரு மகள் பர்தாவுடனும் இன்னொரு மகள் பேண்ட் சர்ட்டுடனும் இருந்தனர். உடைத்தேர்வை அவரவர் விருப்பத் திற்கு விட்டுவிட வேண்டும் என்பதை அவர் சிம்பாலிக்காக சொல்லியிருந்தார்.

பொதுச்சமூகத்திலும் பள்ளிகளின் சீருடையை எல்லோரும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது. கேரளாவில் ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான சீருடையை அறிவித்துள்ளது. அதை அவர்கள் கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள். பள்ளிவரை பர்தா அணிந்து வரும் இஸ்லாமிய மாணவி கள் பின்னர் அதை கழற்றி விடும் பழக்கமும் பரவலாக இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், உடை விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்துவதை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள். நிர்ப்பந்திக்கப்படும் யாராக இருந்தா லும் அவர்களுக்கு ஆதரவாகவே இந்திய சமூகம் நிற்கும். •

-ஆதனூர் சோழன்

Leave A Reply