திமுக – காங்கிரஸ் கூட்டணி : தொகுதி பங்கீடு குறித்து இன்று ஆலோசனை

Share

திமுக தலைவர் மு.க .ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சந்திக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கிட்டதட்ட அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன.

பாஜகவுடன் அதிமுக வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பதை முதல்வரும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி சமீபத்தில் உறுதி செய்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

திமுக தலைவர் மு.க .ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்கிறார்.

தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து மு.க .ஸ்டாலின் உடன் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேரம் பேசாமல், அதே சமயம் தங்களுக்கு இழுக்கற்ற வகையில் எண்ணிக்கையை கேட்டு பெறுவோம் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply