நல்லுறவு வேண்டுமானால் அணை கட்டாதீர்கள்”

Share

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த அனுமதியும் பெறாத நிலையில் அணை கட்டும் பகுதியில் கட்டுமான பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாகக் கூறப்பட்டது.

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

karnataka government says tamilnadu approval to build dam in mekedatu is  not neccesary

அதில், “மேகதாது அணை கட்டுவதன் மூலம் தமிழ்நாடு, கர்நாடகா என இரு மாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம். மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டை எவ்வகையிலும் பாதிக்காது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டுகிறதா கர்நாடகா அரசு?

தற்போது இந்தக் கடிதத்திற்கு ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டின் விவசாயிகள் இதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கர்நாடக அரசுடன் நல்ல உறவையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது.

பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. கர்நாடகா – தமிழ்நாடு நல்லுறவை பாதுகாத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply