இந்தியா ஏற்பாடு செய்த அமைதி உடன்படிக்கை ஏற்பதாக சொல்லி பிறகு அதை எதிர்த்து சண்டையிட்டீர்கள்…
இந்திய அமைதிப்படையுடன் மோதினீர்கள்… ஏராளமான இந்திய வீரர்கள் செத்து மடிந்தார்கள்…
அமைதி ஒப்பந்தத்திற்கு காரணமான ராஜிவை மனித வெடிகுண்டு வைத்து கொன்றீர்கள்…
நார்வே குழு ஏற்பாடு செய்த அமைதி உடன்பாட்டையும் ஏற்பதாக முதலில் சொல்லி பிறகு நிராகரித்தீர்கள்…
அதற்கு என்ன காரணம்? வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தவர்கள்தானே…
நார்வே தூதுக்குழுவினர் பல கட்டங்களாக விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன், கருணா ஆகியோருடன் பேசினார்கள்…
ஆண்டன் பாலசிங்கம் தனது வாழ்நாளின் இறுதியில் இருந்தார்…
ரணில் விக்கிரமசிங்கே வடகிழக்கு மாநிலத்துக்கு சுயாட்சி அளிப்பதாகவும், போலீஸ் அதிகாரம் குறித்து பிறகு பேசலாம் என்றும் ஒப்புக்கொண்டார்…
இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரியவிஷயம். நம்மிடம் ஆயுதங்கள் இல்லை. வெளிநாட்டு உதவி கிடைப்பதும் அரிது. கவுரவமாக இதை ஏற்கலாம் என்று கூறினார்.
தமிழ்செல்வனும், கருணாவும் ஏற்றனர். பிரபாகரனும் ஏற்றார். ஆனால், வெளிநாட்டில் வாழும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் உங்களை நெருக்கினர்…
அவர்கள் வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகளோடு, செட்டில் ஆகியிருந்தனர். இலங்கையில் நிரந்தர தீர்வு ஏற்பட்டுவிட்டால் அவர்களை தஞ்சம் கொடுத்த நாடுகள் விரட்டுவார்கள்.
தனிஈழம் அமைந்துவிட்டால், இரட்டைக் குடியுரிமையோடு வாழலாம் என்ற கனவோடு இருந்தவர்கள், இப்போது அது நிறைவேறாது என்றவுடன் உங்களை நெருக்கினார்கள்…
இதுதானே உண்மை…
உடனே நார்வே உடன்பாட்டை ஏற்க மறுத்தீர்கள். மீண்டும் சண்டை என்றீர்கள்…
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று நிஜமாகவே விரும்பிய ரணில் விக்கிரமசிங்கேவை தோற்கடித்து ராஜபக்சே ஜெயிக்க மறைமுகமாக உதவினீர்கள்… அன்றைக்கு தமிழர்கள் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும்…
ஆனால், உங்கள் தயவால் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே உங்களை ஒழித்துக்கட்ட தீவிர ராணுவ நடவடிக்கை எடுத்தபோது கதறினீர்கள்…
போதுமான ஆயுதங்கள் இல்லை. படைபலமும் இல்லை. கருணா விலகியதன் மூலம் கிழக்குப்பகுதியில் உங்கள் கட்டுப்பாட்டை இழந்தீர்கள்.
விலகிய கருணா உங்கள் ரகசியத்தை வெளியிட்டிருப்பார் என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லை.
ஆனால், எதிரியாக்கிக்கொண்ட இந்தியா உங்களைக் காப்பாற்ற வேண்டும், காப்பாற்றியிருக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டீர்கள்…
தமிழ் மக்களை கவசமாக கொண்டு, அவர்களைக் காப்பாற்ற இந்தியா தலையிடும் என்ற குறுக்கு வழியில் சிந்தித்தீர்கள்…
இதுதான் அதிகபட்சம் நீங்கள் கடைப்பிடித்த யுத்த தந்திரம்…
நீங்கள்தான் தமிழர்களுக்கு தனிநாடு கண்டவர் என்கிறார்கள். வன்னிக் காட்டுக்குள் ஒளிந்து வாழ்ந்த தமிழர் தலைவராக வாழ்ந்து பாவம் சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்து செத்தே போனீர்கள்…
உங்களுக்கு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்னு இப்போவாவது புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.