வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றிவிடுவார்களா?

Share

அந்தக்கால வாக்குப்பதிவு முறையை புகழ்ந்தும்…

இந்தக்கால வாக்குப்பதிவு முறையை கேலி செய்தும் பேசுகிறவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்…

இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் முறை எப்போது, எதற்காக மாற்றியமைக்கப்பட்டது? என்பதை புரியாதவர்கள்தான் இப்படியெல்லாம் புலம்புவார்கள்…

மாநிலங்கள் அனைத்திலும் ஒரே நாளில் தேர்தல் அறிவிக்கும் முறை ரத்தானது ஏன்? பகுதி பகுதியாக ஏன் மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை உணர்ந்தாலும் இப்படி வியாக்யானம் கொடுக்க மாட்டார்கள்…

இன்றைய நிலையில் எல்லைப்புற மாநிலங்களில் பலகட்டத் தேர்தல் தவிர்க்க முடியாதது என்பதை அறியாமல் பேசுகிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.

சரியாக சொல்லப்போனால், எப்படி பார்த்தாலும், இப்போதைய தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதிதான் எண்ணப்படும். மேற்கு வங்கத்தின் 8 ஆவது கட்டத் தேர்தலின் போது தமிழகம் கேரளாவுக்கு தேர்தல் நடத்தினால்கூட, மேற்கு வங்கத்தின் முதல் கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் 1 மாதத்திற்கு மேல் காத்திருக்கத்தான் செய்யும்…

அடுத்ததாக, வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடியை தவிர்க்க ஓட்டுச்சீட்டு என்ற கூக்குரல்…

வாக்குச்சீட்டு முறையில்கூடத்தான் மோசடிகள் நடந்தன. வாக்குச்சாவடியைக் கைப்பற்றி ஒருவரே எல்லோருக்கும் ஓட்டுப்போட்ட கதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறோம். அதிலும்கூட எண்ணிக்கை மோசடி, செல்லும் ஓட்டை செல்லாது என்று தூக்கிப் போடுவது, செல்லாத ஓட்டை செல்லும் என்று சேர்ப்பது, ஒருத்தருக்கு கிடைத்த வாக்குகளை இன்னொருவர் கணக்கில் சேர்ப்பது என்று மோசடிகள் நடக்த்தான் செய்தன…

வாக்குச்சீட்டு முறையை தொடரும் அமெரிக்காவில்கூட மோசடிக் கூக்குரல் எழத்தான் செய்கின்றன…

ஆக, நாம் அந்தக் காலத்தில் போலவே இப்போதும் எச்சரிக்கையாக இருக்கத்தான் வேண்டும்.

Leave A Reply