திமுக ஆட்சிக்கு அவகாசம் குடுங்க.. – கே.எஸ்.அழகிரி உறுதி!

Share

திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆளுனர் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் ஆளுனர் அறிவிப்புகள் திருப்தி அளிக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “வரியை எதில் குறைப்பது, எதில் அதிகரிப்பது, மாநில அரசின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பவற்றை ஆலோசிக்கதான் ரகுராம் ராஜன் போன்ற மிக சிறந்த பொருளாதார ஆலோசகர்களின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. கண்டிப்பாக திமுக தமிழகத்தில் நல்லாட்சி வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply