இவரை நம்பாவிட்டால் வேறு எவரை நம்புவது? ஆதனூர் சோழன்

Share

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் சந்தித்த அவமானங்கள் கொஞ்சமல்ல.
அந்த அவமானங்களில் இருந்தும், அவமரியாதை களில் இருந்தும் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மீட்க சபதமேற்று, அந்த சபதத்தை நிறைவேற்ற இரவு பகல் தூக்கமின்றி உழைத்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

யோசித்துப் பார்த்தால், ஆபரேஷன் தமிழ்நாடு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இந்த மாநிலத்தின் மானத்தை காத்திருக்கிறார்.

உலக அளவில் தமிழ்நாடு இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்திய மாநிலங்கள் என்ன செய்வதென்று திகைத்து நின்ற வேளையில் முதுகெலும்புள்ள போராளியாய் உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஆம், மு.க. ஸ்டாலின் என்பது இப்போது கலைஞரின் முகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் முகமாகவும் அடையாளப் பட்டிருக்கிறது.
ஆயிரம்பேர் ஆயிரம் சொன்னாலும், இன்றைக்கு அவர்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கையாக இருக்கிறார்.

அவரை சந்திக்கும் பொதுமக்களோ, குழந்தைகளோ, இளைஞர்களோ அதைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.

அவர்கள் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியும் புன்னகையும் அதைத்தான் சொல்கிறது.

கலைஞர் காலத்துக்குப் பிறகு தலைமைப் பொறுப்பு வெற்றிடமாக இருக்கிறது என்று யாராரோ அட்டைக் கத்திகளை காற்றில் சுழற்றிக்கொண்டு வெளியே வந்தார்கள்.

நரம்பில்லாத நாக்குகளை சுழற்றி, நாராசமான வார்த்தைகளை கக்கினார்கள். அவர்கள் அனைவரும் இப்போது கோமாளிகளாக அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அளவில் தலைவர்கள் மதிக்கும் தலைவராக மிளிர்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆம், விரைவில் இந்தியாவே திராவிட மாடலாக மாறப்போகிறது என்ற நம்பிக்கை பிறக்கிறது.

திமுக தலைவராக பொறுப்பேற்றபோது இன்று புதிதாய் பிறப்பதாக சொன்னார். ஆம். இவர் வேறு ஒரு ஸ்டாலின்தான். எதையும் முயற்சித்துப் பார்ப்பேன் என்றார். அதை நிறைவேற்றுகிறார். தமிழ்நாடு அவரை வாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறது. வாழ்த்துகள் முதல்வரே.

Leave A Reply