ஜெ.அன்பழகா உன்னை இனி காணவே முடியாதா? மு.க.ஸ்டாலின் இரங்கல்

Share

கொரோனா நிவாரணப் பணிகளில் ஓய்வின்றி மக்கள் பணியாற்றிய திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை மரணமடைந்தார்.

அவருடைய மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக ரத்தம் பாய்ந்த உடல். தனது நலம் பாராமல் கழகத்தின் உத்தரவை ஏற்று கொரோனா நிவாரணப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் காரணமாகவே கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதோ இனி என்றுமே காண முடியாமல் சென்றுவிட்டார். கலைஞரின் அன்பைப் பெற்ற செயல்வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave A Reply