மறுமலர்ச்சி திமுகவில் அதிகமாக முகம் தெரிந்த இரண்டாம் கட்ட தலைவர். துணை பொதுச்செயலாளராக அறியப்பட்டவரின் அறியாத முகம் ஒன்று உண்டு.. காஞ்சியில் பிறந்த போதிதர்மர் தற்காப்பு கலையை எவ்வாறு உலக அளவில் எடுத்து சென்றாரோ அந்த மண்ணில் பிறந்து தற்காப்பு கலையை உலகமெங்கும் கொண்டு செல்ல பல நாடுகளுக்கு சென்று பயிற்சி அளித்தவர்.
தமிழனின் தொன்மையையும் பெருமையையும், திறமையையும் வெளிகாட்டும் மாமல்லபுரத்தில் பேருராட்சி தலைவராக வெற்றிபெற்று அரசியல் களத்தில் அடி எடுத்துவைத்தவர். மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்றவர்களை மல்லர் என அழைப்பது வழக்கம். அதில் சிறந்த பல்லவ மன்னனை மாமல்லர் என அழைத்தனர். அவர் பெயரிலே அமைந்த ஊர்தான் மாமல்லபுரம். அத்தகைய புகழ்பெற்ற ஊரில்தான் பிறந்தார். போதை பழக்கம் அதிகம் பரவக்கூடிய இடத்தில் பிறந்திருந்தாலும் இக்கலையே என்னை எந்த பழக்கத்தையும் நாடி செல்லவிடாமல் தடுத்தது என பெருமையாக கூறுவார்.
இவ்வளவு பெருமை வாய்ந்த மாமல்லபுரத்தை மத்திய அரசு தொல்லியல் கட்டுப்பாடுக்கு எடுத்து, பல கெடுபிடிகளை செய்த பொழுது போராடி தளர்வுகளை பெற்று தந்தவர். மறுமலர்ச்சி திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று முதன் முதலாக நடத்திய நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்ற பெரியார் அணை காக்கும் பேரணி.
பதவிகள் பெற்றோர் பலர் விலகி சென்றாலும் இன்றுவரை காவல் அரணாக விளங்குபவர். எத்தனையோ வதந்திகளை பரப்பினாலும் தடம் மாறாமல் திகழ்பவர். திராவிட இயக்க கொள்கையில் வழுவாதநிலையிலும் திவ்ய பிரதேசங்களில் ஒன்றான மல்லை பெருமாள் கோவிலில் இடற்பாடுகள் ஏற்பட்டால் தலைவர் துணையுடன் உரிமைகளை பெற்று தந்தவர்.
திராவிட இயக்க கொள்கைகளை இவருடைய வார்த்தைகளில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். திராவிட இயக்கத்திற்கு சேரநாடு பெரியாரை தந்தது, பல்லவ நாடு பேரறிஞரை தந்தது. சோழநாடு கலைஞரை தந்தது. பாண்டிய நாடு தலைவர் வைகோவை தந்தது என புதிய பார்வையில் புரியவைத்தவர்.
தலைவர் வைகோவின் போர்படை தளபதியாக அவைக்கு மல்லை சத்யா செல்லவேண்டும் என மாற்றுக்கட்சியினரும் விருப்பபடும் அளவிற்கு தன் திறமையை நிருபித்தவர்.
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் மல்லை சத்யா.
மானாமதுரை மருது